Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

இறால் மசாலா

/
/
/
109 Views

இறால் மசாலா செய்ய தேவையானவை

இறால்- /2 கிலோ
இஞ்சி-சிறு துண்டு
மிளகு-1 /4 தேக்கரண்டி
சோம்பு+கசகசா-1 /4 தேக்கரண்டி
மல்லிப் பொடி-1 /4 தேக்கரண்டி
சீரகம்-1 /4 தேக்கரண்டி
மிளகாய் பொடி-1 /4 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
பூண்டு-7
எண்ணெய்-3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- கைப்பிடி/15
கறிவேப்பிலை-கொஞ்சம்
மஞ்சள் பொடி-கொஞ்சம்

இறால் மசாலா செய்வது எப்படி ?

முதலில் இறாலை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்யவும். பின்பு வெங்காயத்தை உரித்து மெலிதாக நறுக்கவும். கழுவிய இறாலுடன், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு பிசறி 3௦ நிமிடம் வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பூண்டு, இஞ்சி + 7 வெங்காயத்தை அரைத்துக்கொள்ளவும்.பிறகு அடுப்பில் கடாயை வைத்து பிசறிய இறாலைப் போட்டு, மெலிதான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் வேண்டாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அது பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்த மசாலாவை போட்டு வதங்கிய பின், அதில் பாதிவெந்த இறாலையும் போட்டு சிறு தீயில் வதக்கவும்.10 நிமிடம் கழிந்தபின் இறக்கி கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து போட்டு இறக்கவும். பின்பு பரிமாறவும்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text