Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

வீட்டுமனை தேர்வு

/
/
/
208 Views

ஒரு மனை வாங்கும் முன் அதன் திசையை அறிந்து வாங்குவது சிறந்தது. ஒரு மனையின் திசையை, திசை காட்டி மூலம் அறிந்து கொள்ளலாம்.

கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனையை வாங்குவது சிறந்தது. ஏனெனில் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த மனைகளில் வாஸ்து படி கட்டடம் கட்டுவது சுலபமாக இருக்கும்.

ஒரு மனை வாங்கும் போது அதன் வடிவம் சதுரம் அல்லது நீள் சதுரமாக(செவ்வகமாக) இருப்பது அவசியம். மனையின் வடிவம் சரியாக இல்லை என்றால் கட்டடம் கட்டும் முன் அதனை சீர்படுத்துவது சிறந்தது.

இயற்கையாகவே ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், தென்மேற்கு பகுதி உயர்ந்தும் இருந்தால் அந்த மனையை வாங்குவது சிறந்தது.

மனையின் வடகிழக்கு பகுதியில் இயற்கையாகவே ஏரி, பொது குளம், பொது கிணறு இருந்தால் நல்லது.

மனையின் தென்மேற்கு பகுதியில் இயற்கையாகவே குன்றுகள், தொலைபேசி கோபுரம், உயர்ந்த மரங்கள் இருந்தால் நல்லது.

உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி நமது மனையை தொட்டோ அல்லது வளைந்தோ சென்றால் அது முதல் தரமான மனை.

வீதி மனையின் வடகிழக்கு, வடமேற்கு திசையில் வந்து மோதினால் அது நலம். கிழக்கு, வடக்கு பார்த்த மனை மிகவும் சிறப்பு. தெற்கு, மேற்கு மனை என்றால் கூட வாயிலை மாற்றி கட்டினால் அதுவும் சிறப்பே.

கிழக்கு, வடக்கு பார்த்த மனை என்றால் திருமண மூலை, மற்றும் செல்வ மூலையை நல்ல முறையில் உபயோகப்படுத்த முடியும். மேற்கு பார்த்த மனை வியாபாரிகளுக்கு மிக நன்றாக இருக்கும்.

வடிவங்கள் சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம். செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு. இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை.

முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல.

செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது.

வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். விளையாட்டு தளம் , உடற்பயிற்ச்சி தளம் போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல. ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல.

மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது. ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம்.

தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது.

மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை.

வீட்டுமனை ஊரின் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி அமைந்திருந்தால், கல்வி, கலைத்துறையை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும்.

வீட்டுமனை கிழக்கு நோக்கி நீண்டும், மேற்கு திசை பக்கமாக ஒதுங்கியும் அமைந்திருந்தால், அரசு துறையில் பதவி வகிப்பவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகட்ட ஏற்றது.

வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடு கட்டுவதாக இருந்தால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் மனை, ஊரின் வடக்குத் திசையில் அமைய வேண்டும். தெற்கு நோக்கி நீண்டிருந்தால் கூடுதல் சிறப்பு.

நீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.

மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு தென்மேற்கே மனை சற்று உயர்ந்தும், வடகிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்குமாறு நிலத்தை நிரவி விடவேண்டும்.

மரங்கள் ஏதேனும் மனையில் இருந்தால் வீடு கட்டுவதற்கு 3 மாதத்திற்கு முன்பு உரிய பூஜை செய்த பிறகு மரத்தை அகற்ற வேண்டும். ஆணி வேர் உள்பட. கட்டிடத்திற்கு தேவையான தண்ணீர் நிலமட்டத்திற்கு கீழே என்றால் வடகிழக்கும், நிலமட்டத்திற்கு மேலே என்றால் தென்மேற்கே அமைக்கலாம். கான்கிரீட் பொருட்கள் ஊறவைக்கும் தண்ணீ ர் தொட்டியை வடகிழக்கே அமைக்கவும்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text