Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

TAMIL ITHAYAM

Tamil News And Entertainment Website

img

மீன் தொட்டிகள்

/
/
/
176 Views

எல்லா உயிரினங்ககளை போலவே மீன்களும் நல்ல சக்தியை விட்டினுள் கொண்டு வரும் என்பதால் பல வியாபார நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் மீன் தொட்டிகள் களை வைத்து கொள்கிறோம். அமைதி, செல்வம், வளமை மற்றும் வெற்றியன் அடையாளமாகவும் மீன் களை கருதுகிறோம்.

புத்த மதத்தின் எட்டு புனித அடையாளங்களும் ஒன்றாக உள்ள மீன் உருவத்தை கோவில்களில் கூரைகளில் வைப்பது உண்டு.

மீன் தொட்டிகள் வஸ்து முறைப்படி எங்கு வைப்பது :

வடக்கு சுவர் அல்லது தென்கிழக்குச் சுவரை ஒட்டி மீன் தொட்டியை வைக்க வேண்டும் .

தெற்கு பக்கம் மீன் தொட்டியை கண்டிப்பாக வைக்க கூடாது.

விட்டினுள் வைப்பதாக இருந்தால், வாசலுக்கு அருகில் உள்ளே வைப்பது நல்லது .

வீட்டினுள் வரவேற்பு அறையிலும், அலுவலகம் எனில் வரவேற்பு அறை மற்றும் மேலாளர் அறையிலும் வைப்பது நல்லது.

நீறங்கள்:

மீன்கள் பல வண்ணங்களில் இருப்பதால் அதனதன் தன்மைகளுக்கேற்ப தேர்ந்தெடுத்து வளர்ப்பது நலம் பயக்கும்.

சிவப்பு நிற மீன்கள் வளமையை குறிக்கும்.

பச்சை நிற மீன்கள் வள்ளர்ச்சியை குறிக்கும்.

மஞ்சள் நிற மீன்கள் செயல்திறனை குறிக்கும்.

வளர்க்கப்படும் மீன்களின் வகைகள் :

மீன் தொட்டியில் கடல் மீன்கள் உட்பட அனைத்தும் மீன்களும் வளர்க்கலாம். ஆனால், ஏஞ்சல் மீன்களை தவிர்ப்பது நல்லது.

மீன் தொட்டியில் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் வகைகளை தவிர்க்க வேண்டும் .

தன் இனத்தையே விழுங்கும் வகைகளையும் , தவிர்க்க வேண்டும் .

இப்படி வளர்க்க குடாத மீன்களை வளர்த்தல் நமது எண்ணிக்கை தவறிவிடும் வாய்ப்புண்டு .

மீன்களின் எண்ணிக்கை :-

மீன் தொட்டியில் மீன்களை ஒற்றைபடையில் வளர்த்தல் மிகவும் நல்லது.

மீன் தொட்டியில் பொதுவாக எட்டு தங்க மீன்கள் மற்றும் ஒரு கருத மீனையும் சேர்த்து மொத்தம் ஒன்பது மீன்கள் இருப்பது மிகவும் அதிர்ஷ் டமானது.

மீன் தொட்டிகள் மற்றும் குளங்களை அலங்கரித்தல் :

மீன் தொட்டிகளும், குளங்களும் சிறு சமுத்திரமாக கருதபடுவதால் காற்றூட்டு கலங்களை உள்ளே வைத்து எப்போதும் கற்று குமிழ்களை வரும்படி செய்வது நல்ல சக்தியை துண்டுவதற்கு சேர்ந்த வழியாகும் .

ஒழுங்கற்ற வடிவமுடைய பொம்மைகளை மீன் தொட்டிளில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மீன் தொட்டியின் உள்ளே வைக்கும் பொருட்கள் அவற்றுடன் இணக்கமாக இருப்பது நல்லது. குடுமானவரை இயற்கை செடிகள் கற்கள் போன்றவற்றையே வைப்பது நல்லது .

மீன்கள் ஒன்றிரண்டு இறந்துவிட்டால் உடனே அவைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. எனென்றால் ஜோடியாக இரண்டு மீன்கள் செல்வது திருமண ஒற்றுமையை குறிக்கும்.

திருமணம் நிச்சயம் செய்யும்போது ஒரு ஜோடி மீன்களை பரிசாக தந்தால் பல்லாண்டு காலம் செல்வ சிறப்புடன் வாழ்வர் என்று அர்த்தமாகும்.

மீன்களை வளர்ப்பதன் முக்கியத்துவங்கள் :-

மீன்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டே துங்கும் தன்மையை உடையதால், வீட்டிலுளளேர் வெளியே சென்று இருக்கும் சமையமும் , துங்கும் சமையமும் மீன்கள் உள்ளேயே இருப்பதால் தீய சக்திகள் எதுவும் உள்ளே நுழையாது .

இயற்கையின் மாற்றங்களை வீட்டில் உள்ளவர்கள் எளிதில் உணர முடியும்.

தீய சக்திகள் வீட்டில் இருந்தால் அங்கு வசிப்பவர்களின் கால் சுளுக்கி கொள்ளுதல், அடி படுதல் போன்ற சிறு சிறு விபத்துகள் ஏற்படும். இவற்றிலிருந்துவசிப்பவர்களை காத்து கொள்வதற்காக தீய சக்தியை மீன்கள் உள்ளுக்குள் இழுத்து அதன் விளைவால் ஒன்று அல்லது இரண்டு மீன்கள் இறந்து போகும். இப்படி தன்னை வளர்க்கும் வீ ட்டில்உள்ளவர்களுக்காக உயிரையே தியகம் செய்யும் .

மீன் வளர்ப்பதால் நம் மன அழுத்தங்களும் குறைகிறது.

அமங்கலமான இடத்திலும் தங்க மீன்களை உடைய மீன் தொட்டிகளை வைத்து அந்த இடத்தில் உள்ளே தீய தாக்கங்களை வெளியேற்ற இவை பெரிதும் பயன்படுகிறது .

மீன் தொட்டியும் வியாபாரமும் :-

பலவேறு தொழிகளும் , 5 சக்திகளும் உள்பட 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு சக்திக்கும் உரிய தொட்டியின் வடிவம் நீர மீன்களின் எண்ணிக்கை தொட்டியை வைக்க வேண்டிய இடம் ஆகியவை மாறுபடும் . முதலில் எந்த தொழிலுக்கு எந்த சக்தி ஏற்றது என்பதை கண்டறிய வேண்டும் . பிறகு அதற்கோற்றவாறு மீன் தொட்டியை அமைக்க வேண்டும் .

உலோகத்தை சார்ந்த தொழில்கள் :

மீன் தொட்டியை மேற்கு ,வடமேற்கு அல்லது வடக்கு சுவரை ஒட்டி அலுவலகத்திலே வைக்கலம். தொட்டியின் வடிவம் வட்டம் அல்லது எண் கோணமாக இருக்கலாம்.தொட்டியை தாங்கும் மூக்காலி வெள்ளை அல்லது சம்பல் நிற வண்ணத்தில் இருக்கலாம். நான்கு இரு வண்ண நீர மீன்களும், 9 பிரகாசமான மீன்களும் சேர்த்த பதிமூன்று மீன்கள் வளர்த்தல் மிகுந்த லாபம் வரும்.

மரத்தைச் சார்ந்த தொழில்கள் :

மீன் தொட்டியை வடக்கு, கிழக்கு அல்லது தென்கிழக்ககுச் சுவரை ஒட்டி அலுவலகத்திலோ , அறையிலோ இருக்கலாம் . மீன் தொட்டியை தாங்கும் முக்காலி கருப்பு , பச்சை அல்லது வெளீர் நீலத்தால் இருக்க வேண்டும் .எட்டு கரு வண்ணமீன்ஙகளும் , மூன்று பிரகாசமான நீர மீன்களும் மொத்தம் பதினொன்று இருப்பது நல்லது .

நீரைச் சார்ந்த தொழில்கள் :

வடக்கு , கிழக்கு அல்லது தென்கிழக்கு சுவரை ஒட்டி அலுவலகத்திலோ, அறையிலோ மீன் தொட்டியை வைக்கலாம். மீன் தொட்டியானது எண் கோண வடிவிலோ, செவ்வக வடிவிலோ இருக்கலாம். மீன் தொட்டியை தாங்கும் மூக்காலி வெள்ளை , கருப்பு , பச்சை அல்லது நிறத்தில் இருக்கலாம். அரு கரு வண்ண நிறத்திலும், ஒன்று பிரகாசமான நிறத்திலும் மொத்தம் ஏழு மீன்கள் இருப்பது நீரைச் சார்ந்த தொழில்களுக்கு மிகுந்த பலன் தரும்.

நிலத்தைச் சார்ந்த தொழில்கள் :

மீன் தொட்டியை தென்மேற்கு சுவரை ஒட்டி அலுவலகத்திலோ, அறையிலோ வைக்க வேண்டும் . மீன் தொட்டியின் வடிவம் சதுரம் அல்லது வட்டமாக இருக்கலாம் . தொட்டியைத் தாங்கும் மூக்காலி பச்சை, சீவப்பு , அல்லது வெளிர்நீல நிறத்தில் இருக்கலாம் . பத்து கரு வண்ண மீன்களும் , ஜந்து பிரகாசமான நிற மீன்களும் , மொத்தம் பதினைந்து மீன்கள் இருப்பது நல்லது .

தீயை சார்ந்த தொழில்கள் :

மீன் தொட்டியானது கிழக்கு அல்லது தென்கிழக்கு சுவரை ஒட்டி அலுவலகத்திலோ அறையிலோ இருக்க வேண்டும் . தொட்டியை தாங்கும் மூக்காலி பச்சை அல்லது வெளிர்நீல நிறத்தில் இருக்கலாம். இரண்டு கரு வண்ண மீன்களும், ஏழு பிரகாசமான நிறத்திலும் மொத்தம் ஒன்பது மீன்கள் இருந்தால் தொழிலில் சிறப்படையலாம்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

It is main inner container footer text